வீடு / சமையல் குறிப்பு / Zero Oil (PPP soup) Pasalai Keerai Pasiparupu Soup

Photo of Zero Oil (PPP soup) Pasalai Keerai Pasiparupu Soup by Aishwarya Rangan at BetterButter
889
4
0.0(1)
0

Zero Oil (PPP soup) Pasalai Keerai Pasiparupu Soup

Dec-20-2018
Aishwarya Rangan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக் கீரை
  2. பாசிப்பருப்பு 4 ஸ்பூன்
  3. பால் 1/2 கப்
  4. சீரகம் 1/4 ஸ்பூன்
  5. மஞ்சள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பூண்டு 6 பல்
  8. மிளகு தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலக் கீரை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
  2. பாசிப்பருப்பு 4 ஸ்பூன் 15 நிமிடம் ஊறவைக்கவும்
  3. பூண்டு சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் அதேபோல் பாலக்கீரை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. 1/2 கப் பால் எடுத்து கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரும் சேர்த்து 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் சீரகம் சிறிதளவு உப்பு சேர்த்து பருப்பை வேக வைக்கவும்
  6. மற்ற அடுப்பில் பால், நறுக்கி வைத்திருந்த பாலக் கீரை, நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வேக விடவும்
  7. கீரை பூண்டு நன்றாக வெந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  8. மீண்டும் அதே பாத்திரத்தில் சேர்க்கவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அல்லது பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
  9. அதோடு வேக வைத்திருந்த பாசிப்பருப்பினை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்
  10. சிறிதளவு உப்பு மற்றும் காரத்திற்காக 1/2 ஸ்பூன் பெப்பர் தூள் சேர்த்து கொள்ளவும்
  11. இப்போது மிகவும் ஆரோக்கியமான கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள சூப் ரெடி ஆகி விட்டது
  12. சிறுநீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
avish anaa
Dec-21-2018
avish anaa   Dec-21-2018

Healthy recipe

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்