வீடு / சமையல் குறிப்பு / டெல்லி தெருக்கடை உணவு (சோலே பட்டூரே)

Photo of Delhi street Food ( Chole Bhature) by Jayasakthi Ekambaram at BetterButter
1540
0
0.0(0)
0

டெல்லி தெருக்கடை உணவு (சோலே பட்டூரே)

Mar-18-2019
Jayasakthi Ekambaram
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டெல்லி தெருக்கடை உணவு (சோலே பட்டூரே) செய்முறை பற்றி

டெல்லியில் பிரசித்தி பெற்ற தெருக்கடை உணவான சோலே பட்டூரே

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை கால் கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  9. எண்ணை தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. பிரிஞ்சி இலை ஒன்று
  12. சீரகம் அரை ஸ்பூன்
  13. பட்டை ஒரு சிறிய துண்டு
  14. கிராம்பு-2
  15. பச்சை மிளகாய் ஒன்று
  16. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
  17. மைதா மாவு 2 கப்
  18. ரவை 2 டீஸ்பூன்
  19. கெட்டித் தயிர் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் ரவை கெட்டித்தயிர் 2 டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து நன்றாக சாஃப்டாக பிசைந்து வைக்கவும்
  2. அந்த பிசைந்த மாவின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தேய்த்து மூடி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. மாவு ஊறும் நேரத்தில் சோலே ரெடி செய்து கொள்ளலாம்
  4. எட்டு மணி நேரம் ஊற வைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை சாஃப்டாக வேக வைத்துக் கொள்ளவும்
  5. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் சீரகத் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  6. இவற்றை நன்றாக வதக்கிய பின் ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்
  7. ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பச்சைமிளகாய் பிரிஞ்சி இலை சீரகம் சேர்த்து வதக்கவும்
  8. வேக வைத்த கொண்டைக் கடலையை தண்ணீரோடு அதில் சேர்த்துக் கொள்ளவும்
  9. அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும்
  10. தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  11. பச்சை வாசனை போனவுடன் அடுப்பை ஆஃப் செய்து கொத்தமல்லித் தழை தூவவும்.
  12. அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டூராக்களை பொரித்தெடுக்கவும்
  13. பட்டூராக்களை தட்டில் வைத்து சோலே மசாலாவுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்