வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத ரவா கேக்

Photo of Eggless Semolina Cake by Suhan Mahajan at BetterButter
5370
258
4.6(0)
0

முட்டையில்லாத ரவா கேக்

Oct-19-2015
Suhan Mahajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மற்றவர்கள்
  • இந்திய
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை: 2.5 கப் (பொறபொறப்பான ரவையைப் பயன்படுத்தவேண்டாம்)
  2. தயிர்: 1 கப்
  3. பால்: 1 கப்
  4. சர்க்கரை: 1 கப்
  5. டூட்டி ப்ரீட்டி: 1/2 கப் (உலர் திராட்சைகள் அல்லது வாதுமை பருப்புகளைப் பயன்படுத்தலாம்)
  6. பேக்கிங் பவுடர்: 1 1/2 தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா: 1/2 தேக்கரண்டி
  8. சமையல் எண்ணெய்: 1/2 கப்
  9. ஒரு சிட்டிகை உப்பு

வழிமுறைகள்

  1. ரவை, தயிர், பால், சர்க்கரை, சமையல் எண்ணெயைக் கலந்துகொள்க. ரவையை நொதிக்கவிடக் கலவையை 15 நிமிடங்களுக்கு எடுத்துவைக்கவும். மாவின் பதம் இட்லி மாவின் பதத்திற்கு இருப்பதை உறுதிசெய்துகொள்க, அப்போதுதான் தேவையான பாலைச் சேர்க்கலாம்.
  2. ரவை நொதித்ததும், பேக்கிங் பவுடரையும் பேக்கிங் சோடாவையும் சேர்க்கவும்.
  3. அதன் பின்னர் டூட்டி ப்ரூட்டியைச் சேர்த்து வெட்டி மாவை மடித்துக்கொள்க.
  4. சமையல் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கேக் மாவை பாத்திரத்தில் ஊற்றுக. நன்றாகத் தட்டி சமமாகப் பரப்பிக்கொள்க.
  5. ஏர்பிரையரை 180 டிகிரிக்கு ப்ரீ ஹீட் செய்து கேக்கை பேக்கிங் செய்ய 15 நிமிடங்களுக்கு 160 டிகிரியில் வைக்கவும். கத்தியால் அல்லது பல் குத்தும் குச்சியால் குத்தி அவை சுத்தமாக வெளியே வருகிறதா எனச் கேக்கைச் சோதிக்கவும். தயாரானதும் அருமையான பொன்னிற கேக்கை நீங்கள் பெறுவீர்கள். 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவைக்கவும்.
  6. ஓவனில் இருந்து கேக்கை எடுத்து முழுமையான ஆறவிடவும்.
  7. ஆறியதும், துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும். பரிமாறும்போது உங்கள் முகத்தில் புன்னகை இருக்கவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்