வெஜி புலாவ் | Veg Pulao in Tamil

எழுதியவர் Febina Farook  |  13th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Veg Pulao by Febina Farook at BetterButter
வெஜி புலாவ்Febina Farook
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

605

0

வெஜி புலாவ் recipe

வெஜி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Veg Pulao in Tamil )

 • பாஸ்மதி அரிசி - 2 கப்
 • நெய் - 2 தேக்கரண்டி
 • ஏலக்காய் - 2
 • இலவங்கப்பட்டை - 1 இன்ச்
 • கிராம்பு - 2
 • வெங்காயம் (நறுக்கப்பட்டது) - 2 நடுத்தர அளவிலானது
 • இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
 • கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
 • பச்சை குடமிளகாய் - 1/4 கப்
 • உறைந்த சோளம் - 1/4 கப்
 • கேரட் (துருவப்பட்டது) - 1/4 கப்
 • சீரகம் - 1தேக்கரண்டி
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி

வெஜி புலாவ் செய்வது எப்படி | How to make Veg Pulao in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம் சேர்க்கவும். வெடிக்கட்டும். வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மிளகாய்த் தூள் கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.
 2. காய்கறிகள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். அரிசியை ஒரு அகலமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்தித் தயார் செய்யவும். மசாலாக்களைச் சேர்க்கவும். கடாயில் தண்ணீரை ஊற்றி மூடியிடப்பட்டுக் கொதிக்கவிடவும்.
 3. வேகமாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைச் சரே்த்து கொஞ்சம் உப்பைத் தெளிக்கவும். மூடியிட்டு வைக்கவும். பாதி தண்ணீர் உறிஞ்சப்பட்டிருக்கும் நிலையில் தீயை குறைத்துவிட்டு அரிசியை நன்றாகக் கிளரவும்.
 4. பெரும்பாலானத் தண்ணீர் உறிஞ்சப்பட்டதும், தீயை மிகக் குறைவான நிலைக்குக் கொண்டுவந்து முழுமையாக வேகும்வரை வைக்கவும். இடையிடையே கலக்கவும். அடுப்பை நிறுத்தவும். தயாரித்து வைத்துள்ள மசாலாவில் சாதத்தைச் சேர்க்கவும். சிறு தீயில் நன்றாகக் கலக்கவும், அப்போதுதான் ருசி நன்றாக ஒன்றிணையும்.
 5. கொஞ்சம் கொத்துமல்லியால் அலங்கரித்து உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் அல்லது அடர்த்தியான குழம்பு எதனோடாவதுச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Veg Pulao in tamil (0)