வீடு / சமையல் குறிப்பு / கானாங்கெளுத்தி குழம்பு

Photo of Mackerel curry by Anitha Nayak at BetterButter
3154
46
4.6(0)
0

கானாங்கெளுத்தி குழம்பு

Nov-17-2015
Anitha Nayak
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கானாங்கெளுத்தி மீன்குஞ்சு/உங்களுக்கு விருப்பமான சிறிய மீன் ஏதாவது - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1 நடுத்தர அளவில் நன்றாக நறுக்கப்பட்டது
  3. பச்சை மிளகாய் - 2 நறுக்கப்பட்டது
  4. தக்காளி - 2 நடுத்தர அளவிலானது கனசதுரமாக நறுக்கப்பட்டது.
  5. கொத்துமல்லி இலைகள் - 2 கொத்துகள் நறுக்கப்பட்டது
  6. கறிவேப்பிலை - 2 கொத்துகள்
  7. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. புதிதாக அரைக்கப்பட்ட சாந்தைத் தயாரிப்பதற்கானச் சேர்வைப்பொருள்கள்:
  10. துருவப்பட்ட தேங்காய் - 1 கப்
  11. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  12. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  13. பூண்டு - 10 நடுத்த அளவிலானப் பற்கள்
  14. வெங்காயம்/சாம்பார் வெங்காயம் - 3-4 தோலுரிக்கப்பட்டது
  15. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  16. சிவப்பு மிளகாயத்தூள் - 1 தேக்கரண்டி அல்லது அதிகமாக, உங்கள் சுவைக்கேற்றபடி
  17. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  18. கறிவேப்பிலை - கையளவு
  19. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி அல்லது உங்களுக்கு விருப்பமான எண்ணெயைப் பயன்படுத்தவும்

வழிமுறைகள்

  1. மீனை சுத்தப்படுத்திக் கழுவி தண்ணீரை வடிகட்டவும். நான் மீனின் தலையை சமைக்கமாட்டேன், ஆனால் நீங்கள் விரும்பினால் செய்துகொள்ளலாம்.
  2. ஒரு வறுவல் பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. வெந்தயம் சேர்த்து, மென்மையாகும்வரை வறுக்கவும், வெங்காயத்தைப் போடவும். கசியும் வரை வெங்காயத்தை வறுக்கவும்.
  3. புதிய சாந்துக்காகக் குறிப்பிடப்பட்ட அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் சேர்க்கவும். சில நிமிடங்கள் அனைத்து சேர்வைப்பொருள்களையும் வறுக்கவும். கடாய் மிகவும் சூடாக இருநதால் தீயை அடக்கவும், சேர்வைப்பொருள்களை நாம் எரிக்கப்போவதில்லை.
  4. அனைத்துச் சேர்வைப்பொருள்களின் சுவர்க்க நறுமணத்தை நீங்கள் உணர்ந்ததும், தீயை நிறுத்தவும். ஆறட்டும். சாந்துக்கான சேர்வைப்பொருள்கள் ஆறியதும், மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க. தீயை நடுத்தர நிலையில் அமைத்துக்கொள்க. எண்ணெய் சூடானதும், நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். கொஞ்சம் உப்பு தூசி விரைவாக வறுக்க உதவவும்.
  6. தக்காளி இளகி கசிந்ததும், புதிதாக அரைக்கப்பட்ட சாந்தை சேர்த்துக்கொள்க. நன்றாக கலக்கவும். 500 மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் சுத்தப்படுத்திய மீனை குழம்பில் போடவும். சுவைக்கேற்ற உப்பு சேர்த்துக்கொள்க.
  7. சிம்மில் வைக்கவும், மீன் வெந்து எல்லா சுவையையும் உறிஞ்சட்டும்.
  8. 5-8 நிமிடங்கள் மீன் வேகவேண்டும். அதிகம் வேகவைத்துவிடக்கூடாது, இவையெல்லாம் சிறிய மீன்கள் என்பதால் குழம்பில் கரைந்துவிடும்.
  9. நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்காரம் செய்க. தேவைப்பட்டால் கொஞ்சம் கறிவேப்பிலையைத் தூவிக்கொள்ளவும்
  10. ஒரு பாத்திரத்தில் சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்