வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ரவா பணியாரம்

Photo of Coconut Rava Appe by Janaki Priya at BetterButter
777
4
0.0(0)
0

தேங்காய் ரவா பணியாரம்

Oct-09-2017
Janaki Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ரவா பணியாரம் செய்முறை பற்றி

மாலை நேரம் சிற்றுண்டிக்கு ஏற்ற ருசியான பணியாரம் இது...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல்- 1 கப்
  2. பாம்பே ரவை - 1 கப்
  3. பொடித்த சீனி- 3/4 கப்
  4. முந்திரி பருப்பு- 1/4 கப்
  5. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  2. முந்திரி பருப்பை 15  நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. பின் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ரவை, தேங்காய் துருவல், முந்திரி பருப்பு, சீனி, ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு இட்லி (பணியாரம்) மாவு பதத்திற்கு வரும் வரை நன்கு  மையாக அரைக்கவும்.
  4. அரைத்த மாவு எளிதாக ஊற்றும் பதத்தில் உள்ளதா என்பதை சரி பார்த்து, பின் தேவையென்றால் தண்ணீர் சேர்த்து வைத்து கொள்ளவும்.
  5. பின் சூடான பணியாரக் குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, பணியார மாவை ஊற்றவும்.
  6. அடிப்பாகம் வெந்தவுடன் எல்லாவற்றையும் பணியாரக் கரண்டி அல்லது போஃர்க்கினால் திருப்பி வேக விடவும்.
  7. இரு புறமும் பொன் நிறம் வரும் வரை நன்கு வேக விடவும். உட்புறமும் நன்றாக வெந்துள்ளதா என்பதை சரி பார்த்த பின் பணியாரக் குழிகளில் இருந்து எடுக்கவும்.
  8. சூடான ருசியான தேங்காய் ரவா பணியாரம் தயார்.
  9. மாலை நேரம் சிற்றுண்டிக்கு ஏற்ற ருசியான பணியாரம் இது...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்