வீடு / சமையல் குறிப்பு / சுண்டக்காய் வற்றல்குழம்பு

Photo of Turkeyberry Vathakuzhambu by Janaki Priya at BetterButter
41
9
0.0(0)
0

சுண்டக்காய் வற்றல்குழம்பு

Oct-25-2017
Janaki Priya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சுண்டக்காய் வற்றல்குழம்பு செய்முறை பற்றி

சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சுவையான காரசாரமான குழம்பு இந்த சுண்டக்காய் வற்றல்குழம்பு!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1.  பொடியாக அரைத்து கொள்ள
  2. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
  4. நல்லமிளகு - 1 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு- 1.5 மேசைக்கரண்டி
  6. தனியா- 2 மேசைக்கரண்டி
  7. துவரம்பருப்பு- 1.5 மேசைக்கரண்டி
  8. கடலைபருப்பு- 1/2 மேசைக்கரண்டி
  9. அரிசி - 1 தேக்கரண்டி
  10. காய்ந்த சிகப்பு மிளகாய்-10
  11. வற்றல்குழம்பிற்கு தேவையானவை
  12. சுண்டக்காய் வற்றல் - 1/2 கப்
  13. புளி- எலுமிச்சை அளவு
  14. சின்ன வெங்காயம்-10
  15. பூண்டு- 8 பல்
  16. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
  17. கடுகு-1/2 தேக்கரண்டி
  18. வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
  19. காய்ந்த சிகப்பு மிளகாய்-2
  20. கறிவேப்பிலை- சிறிதளவு
  21. உப்பு- தேவையான அளவு
  22. நல்லெண்ணெய்- 3 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வெந்தயம்,நல்லமிளகு,உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, தனியா, அரிசி,காய்ந்த சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும்.
  2. இதனை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.வற்றல் குழம்பு பொடி தயார்.
  3. பின் சூடான வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, சுண்டக்காய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  4. பின்பு வாணலியில் 1 மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சீரகம்,வெந்தயம்,காய்ந்த சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. இதனுடன் பூண்டு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. இதனுடன் 1 கப் புளி தண்ணீர் சேர்த்து , தேவையான அளவு உப்பு  சேர்த்து பூண்டு மற்றும் சின்னவெங்காயம் வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. பின்பு மேலும் சிறிது தண்ணீர்,  பொடித்து வைத்துள்ள வற்றல்குழம்பு பொடி சேர்த்து  (2 மேசைக்கரண்டி) அளவு  சேர்த்து 2 நிமிடம்,மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
  8. பின் வறுத்து வைத்துள்ள சுண்டக்காய் வற்றல், பெருங்காயத்தூள் சேர்த்து, 3-5 நிமிடம் நன்கு குழம்பு வற்றும் வரை கொதிக்க விடவும்.
  9. பின் 1 மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெயை குழம்பை சுற்றி ஊற்றி, குழம்பை இறக்கவும்.
  10. சுவையான காரசாரமான வற்றல் குழம்பு தயார்!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்