வீடு / சமையல் குறிப்பு / காரடையான் நோன்பு அடை

Photo of Karadaiyan nonbu adai by Krishnasamy Vidya Valli at BetterButter
727
3
0.0(0)
0

காரடையான் நோன்பு அடை

Oct-27-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரடையான் நோன்பு அடை செய்முறை பற்றி

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரத்தில் சாவித்திரி நோன்பு அன்று தத்தம் கணவர்களின் தீர்க்காயுள்காக மனைவிமார்களால் செய்யப்படும் அடை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு ( ஈர அரிசி திரித்தது )- 1 1/2 cup (அரிசி ஊறவைத்து காய வைத்து மிக்ஸியில் திரிப்பதற்கான நேரம் சேர்க்கப்படவில்லை)
  2. வெல்லம் - 1 1 / 2 cup
  3. பெரும்பயறு - 3 தேக்கரண்டி
  4. தண்ணீர் - 2 1/4 cup
  5. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  6. தேங்காய் துருவல் /பல்லுகீறியது - 3 தேக்கரண்டி
  7. நெய் - 2 தேக்கரண்டி
  8. வாழை இலை - 1
  9. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். பொறுமையாக வறுக்கவும் கருக கூடாது. பச்ச வாசனையுடனும் இருக்க கூடாது
  2. பெரும்பயறு சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்
  3. பயறை தனியாக குக்கரில் வேக வைக்கவும் குழைய கூடாது
  4. வறுத்த மாவுடன் ஏலக்காய் பொடி தேங்காய் சேர்த்து கலந்து வைக்கவும்
  5. கடாயில் சிறிது நெய் விட்டு வெல்லம் சேர்த்து 2 1/4 cup தண்ணீர் சேர்த்து கரைய விடவும். விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  6. ஒரு கொதி வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் மீதமுள்ள நெய் சேர்க்கவும்
  7. வேகவைத்த பயறை சேர்க்கவும்
  8. அடுப்பை அணைத்து ஆற விடவும்
  9. வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  10. எண்ணெய் தண்ணீர் சேர்த்து இலையில் தடவிக்கொள்ளவும்
  11. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இலையில் அடை போல் தட்டிக்கொள்ளவும்
  12. இட்லி தட்டில் அல்லது எவர்சில்வர் எண்ணெய் வடிகட்டியிலோ ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வேக விடவும்
  13. அடை வெந்ததும் (இலையிலிருந்து தானாக வரும் ) எடுத்து சிறிது ஆறவிடவும்.
  14. வெண்ணெயுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்