வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக்

Photo of CHOCOLATE STRAWBERRY CAKE by Asiya Omar at BetterButter
764
5
0.0(0)
0

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக்

Nov-18-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக் செய்முறை பற்றி

கேக் செய்ய சத்தான பாதாம்,ஸ்ட்ராபெர்ரி சேர்ப்பதால் சுவையும் மணமும் நிறைந்திருக்கும்.இந்த கேக் செய்ய முட்டை,பட்டர்,மில்க் எதுவும் தேவையில்லை.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி -250 கிராம்
  2. பொடியாக நறுக்கிய தோல் நீக்கிய பாதாம் -50 கிராம்
  3. மைதா-200 கிராம்
  4. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  5. சீனி -150 கிராம்
  6. கோகோ பவுடர் -3 மேஜைக்கரண்டி
  7. சோடா உப்பு - 1 தேக்கரண்டி
  8. ஆயில் -80 மில்லி
  9. வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
  10. ஒயிட் வினிகர் - 1 மேஜைக்கரண்டி
  11. குளிர்ந்த நீர் -250 மில்லி
  12. அலங்கரிக்க:-
  13. ரெடிமேட் டெய்ரி விப் - 3 மேஜைக்கரண்டி
  14. பால் -100 மில்லி
  15. ஸ்டராபெர்ரி துண்டுகள்

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களும் தயாராக எடுத்து வைக்கவும்.
  2. ஸ்ட்ராபெர்ரி,பாதாம் பொடியாக நறுக்கி வைக்கவும்.இரண்டையும் ஒரு பவுலில் சேர்த்து வைக்கவும்.
  3. மைதா மாவு,கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர், சோடா உப்பு சேர்த்து சலித்து வைக்கவும்.
  4. ஒரு பவுலில் சலித்த மாவை கொட்ட நடுவில் ஒரு குழிவை உண்டாக்கவும்.
  5. அடுத்து பவுலில் எண்ணெய்,வினிகர்,சீனி,வெனிலா எசன்ஸ்,குளிர்ந்த நீர் சேர்த்து நன்கு அடித்து மாவில் ஊற்றவும்
  6. எல்லாம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. இதனுடன் ஸ்ட்ராபெர்ரி ,பாதாம் துண்டுகளை சேர்க்கவும்.லேசாக பிரட்டவும்.
  8. பேக்கிங் பேனில் எண்ணெய் தடவினால் கேக் ஒட்டாமக் வரும்.
  9. மாவை பேனில சமமாக விடவும்.
  10. ஓவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
  11. கேக்கை 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.கேக் நன்கு ஆறியவுடன் துண்டு போடவும்.
  12. கேக் நன்கு ஆறிய பின்பு போடவும்.
  13. துண்டு போட்டு அலங்கரிக்கலாம்.அதற்கு இன்ஸ்டண்ட் டெய்ரி விப்,பால் கோகோ பவுடர் ஒரு தேக்கரண்டி போட்டு 5 நிமிடம் வெண்ணெய் போல ஆகும் வரை் அடிக்கவும்.கிரீமியாக வரும்.
  14. கேக் மேல் பாலிதீன் கவரில் துளை போட்டு பிழிந்தோ அல்லது கரண்டி கொண்டு தடவியோ ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் அலங்கரித்து பரிமாறவும்.
  15. குழந்தைகள் விரும்பும் சாக்கலேட் ஸ்ட்ராபெர்ரி கேக் தயார். பிறந்தநாளின் போது செய்து பார்ட்டியில் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்