வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மோமோஸ்

Photo of Veg Momos by Subashini Krish at BetterButter
463
2
0.0(0)
0

வெஜ் மோமோஸ்

Nov-18-2017
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் மோமோஸ் செய்முறை பற்றி

ஒரு காலத்தில் மோமோஸ் வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே உண்ணப்படும் உணவாக இருந்தது.தற்காலத்தில் எல்லா மால்களிலும் கிடைக்கிறது. குழந்தைகளின் விருப்ப உணவாகவும் உள்ளது. இதை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • ஸ்டீமிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1/4 கிலோ
  2. எண்ணெய் 2 தேக்கரண்டி
  3. கேரட் 2
  4. முட்டைக்கோஸ் 1/4 கிலோ
  5. குடமிளகாய் 1
  6. பீன்ஸ் 10
  7. பச்சை மிளகாய் 1
  8. பூண்டு 3பல்
  9. சோயா சாஸ் 1 தேக்கரண்டி
  10. சர்க்கரை 1/2 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதாமாவை உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  5. சோயா சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கி ஆற விடவும்
  6. மைதா மாவை பெரிதாக தேய்த்து ஒரு வட்ட மூடி கொண்டு சிறு வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
  7. ஒரு ஸ்பூன் கலவையை நடுவில் வைத்து படத்தில் உள்ளது போல் மூடவும் .
  8. அனைத்தையும் தயார் செய்து இட்லிப் பானையில் 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து தக்காளி சாஸுடன் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்