வீடு / சமையல் குறிப்பு / நூடுல்ஸ் ஸ்பிங் ரோல்ஸ்

Photo of Noodles Spring Rolls by Hameed Nooh at BetterButter
876
6
0.0(0)
0

நூடுல்ஸ் ஸ்பிங் ரோல்ஸ்

Nov-19-2017
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நூடுல்ஸ் ஸ்பிங் ரோல்ஸ் செய்முறை பற்றி

மிகவும் சுவையான இந்த ரோல்ஸ் மாலையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் கொடுக்க ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூடுல்ஸ் - 300 கிராம்
  2. கேரட் - 1
  3. குடை மிளகாய் - 1
  4. பட்டாணி - 1/2 கப்
  5. பீன்ஸ் - 3
  6. சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  7. தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  8. துருவிய சீஸ் - 1 கப்
  9. உப்பு - தேவைக்கு
  10. எண்ணெய் - தேவைக்கு
  11. ஸ்பிரிங் ரோல்ஸ் சீட் செய்ய :
  12. மைதா - 1 கப் + 2 டேபிள் ஸ்பூன்
  13. உப்பு -  1/4 தேக்கரண்டி
  14. சோள மாவு (கார்ன் ப்ளார் )- 3 மேசைக்கரண்டி
  15. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. நூடுல்ஸை சிறிது உப்பு சேர்த்து அவித்து தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளமாக நறுக்கிய காய்கறிகளுடன் உப்பு, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி் கொஞ்சம் வேக விடவும்.
  3. இதோடு துருவிய சீஸ் மற்றும் நூடுல்சை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  4. மைதா மாவுடன் பால், உப்பு, கார்ன் ப்ளார் சேர்த்து நன்கு கலந்து தோசை கல்லில் எண்ணெய் தடவி சிறிய தோசை அளவிற்கு மாவை ஊற்றி எடுக்கவும்.
  5. அதன் நடுவே நாடுல்ஸை வைத்து ரோல் போல் மடித்து மைதாவுடன் தண்ணீர் சேர்த்து அந்த கலவையில் தோய்த்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் ப்யிட்ஜில் வைத்து எடுத்து பொறிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்