வீடு / சமையல் குறிப்பு / அவல் மல்டி கிரைன் வெஜ் பராத்தா

Photo of Poha multigrain vegitable paratha by Krishnasamy Vidya Valli at BetterButter
67
2
0.0(0)
0

அவல் மல்டி கிரைன் வெஜ் பராத்தா

Nov-20-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் மல்டி கிரைன் வெஜ் பராத்தா செய்முறை பற்றி

எப்போதும் பராத்தா மைதா மாவில் செய்யப்படும் ஆனால் இது வித்தியாசமான முறையில் உடலுக்கு ஆரேக்கியமான அவல் மற்றும் மல்டி கிரனில் செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதனோடு காய்களும் சேர்வதால் டபுள் ஆரேக்கியமான உணவு இது

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்டி பார்ட்டிஸ்
 • ஃப்யூஷன்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. அவல் - 1 கப் ( கெட்டி அவல்)
 2. மல்டி கிரைன் மாவு - 1 கப்
 3. வெங்காயம் கேரட் முட்டைகோஸ் -துருவல் 1 கப்
 4. எண்ணெய் - 4 தேக்கரண்டி +பராத்தா வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்
 5. உப்பு - 1 தேக்கரண்டி
 6. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
 7. ஆம்சூர் பவுடர் - 1 / 2 தேக்கரண்டி
 8. மஞ்சள்பொடி - 1 / 2 தேக்கரண்டி
 9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
 10. கஸுரி மேத்தி - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. அவலை களைந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும்
 2. வெங்காயம் முட்டைகோஸ் நீளமாக நறுக்கவும். கேரட் துருவிக்கொள்ளவும்.
 3. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்
 4. பச்ச வாசனை போனவுடன் முட்டைகோஸ் கேரட் சேர்க்கவும்
 5. இரண்டு நிமிடங்கள் கழித்து மஞ்சள்பொடி ஆம்சூர் பவுடர் காஷ்மீர் சில்லிபவுடர் உப்பு சேர்த்து கிளறவும்
 6. ஊறவைத்த அவல் மல்டி கிரன் மாவு மற்றும் கிளறிய காய்கள் கொத்தமல்லிஇலை கஸுரி மேத்தி ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்துவைக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து சிறுசிறு உருண்டைகளாகஉருட்டிவைக்கவும்
 7. உருண்டைகளை பராத்தா வாக இலையிலோ அல்லது பாலிதீன் கவரிலோ கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு தட்டவும்
 8. தோசைகல்லில் எண்ணெய் விட்டு விருப்பப்பட்டால் நெய் விட்டு வாட்டி எடுத்தால் ஆரேக்கியமான அவல் மல்டி கிரன் வெஜ் பராத்தா ரெடி. வெள்ளரிக்காய் சாலட் அல்லது எதாவது ஒரு சப்ஜியுடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்