வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சப்பாத்தி

Photo of Radish paratha/mooli paratha by Subashini Krish at BetterButter
531
2
0.0(0)
0

முள்ளங்கி சப்பாத்தி

Nov-21-2017
Subashini Krish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சப்பாத்தி செய்முறை பற்றி

பெரும்பாலான குழந்தைகள் முள்ளங்கி சாப்பிட விரும்புவதில்லை. இவ்வாறு செய்து எளிதில் உண்ண வைக்க முடியும். மதிய உணவாக பள்ளிக்கு எடுத்துச் செல்லவும் உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முள்ளங்கி 2 கப் துருவியது
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகத் தூள் 1/2 ஸ்பூன்
  6. நெய் 1 ஸ்பூன்
  7. கோதுமை மாவு 1/4 கிலோ
  8. மாவு பிசைய தண்ணீர்

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவை சற்றே தளர்வாக பிசைந்து மூடி வைக்கவும்
  2. கடாயில் நெய் ஊற்றி துருவிய முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கலவையை நன்கு ஆற விடவும்.
  5. சப்பாத்தி மாவை நடுவில் மொத்தமாகவும் ஓரத்தில் மெலிதாகவும் தேய்த்து முள்ளங்கி கலவையை 2 ஸ்பூன் வைத்து மூடி ட்ரை மாவில் பிரட்டி சப்பாத்தியாக தேய்க்கவும்.
  6. தோசைக் கல்லில் இரு புறமும் நன்கு வேக விட்டு நெய் தடவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்