வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு பொரியல்

Photo of Potato Fry by Rabia Hamnah at BetterButter
377
3
0.0(0)
0

உருளை கிழங்கு பொரியல்

Dec-16-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக் கிழங்கு-4 பெரியது
  2. பெரிய வெங்காயம்-2
  3. மிளகாய் பொடி- 5-6 ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
  4. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  5. உப்பு-தேவைக்கு
  6. தாளிக்க தேவையானவை
  7. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  8. கடுகு-2 ஸ்பூன்
  9. சீரகம்+சோம்பு-2 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை -2 கொத்து

வழிமுறைகள்

  1. எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் உருளைக் கிழங்கை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தணலில் வேக வைக்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். அடி பிடிப்பது போல் இருந்தால் மிகக் கொஞ்சமாக சேர்க்கவும்.
  3. முக்கால் வேக்காடு வெந்ததும் தீயைக் கூட்டி வைத்து கொஞ்சம் முறுவியதும் அனைத்து விடவும் பின்பு எண்ணெயில் கறிவேப்பிலையை பொறித்து எடுத்து கிழங்கில் சேர்க்கவும்.
  4. தயிர் சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்