வீடு / சமையல் குறிப்பு / Tomato Kotsu

Photo of Tomato Kotsu by Yasmin Shabira at BetterButter
0
7
5(1)
0

Tomato Kotsu

Dec-21-2017
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ప్రతి రోజు
  • దక్షిణ భారతీయ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 2
  2. தேங்காய் : 2 மேசைக்கரண்டி
  3. பொட்டு கடலை : 2 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் : 1
  5. வெங்காயம் : 1
  6. கடுகு : 1 தேக்கரண்டி
  7. உளுந்து : 1/2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை : ஒரு கொத்து
  9. எண்ணெய் : 1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் : 1 சிட்டிகை
  11. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தக்காளி இரண்டாக வெட்டி தோல் நீங்கி வரும் வரை தண்ணீரில் 6-7 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளவும்...
  2. தோல் நீங்கி வந்த பின் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து ப்யூரி செய்து கொள்ளவும்.
  3. பின்னர் தேங்காய் பச்சை மிளகாய் மற்றும் பொட்டு கடலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்...
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்...
  5. பிறகு அதில் தக்காளி ப்யூரி சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
  6. தண்ணியாக வேண்டும் என்றால் தேங்காய் சேர்த்த பின் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடலாம்...
  7. மிகவும் ஈசியாக செய்ய கூடிய தக்காளி கொத்சு தயார்!!!
  8. இது இட்லி, தோசை, ஆப்பம் மற்றும் ஊத்தப்பத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-21-2017
Pushpa Taroor   Dec-21-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்