வீடு / சமையல் குறிப்பு / தட்டப்பயறு மசாலா

Photo of Red cow peas Masala by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
371
3
0.0(0)
0

தட்டப்பயறு மசாலா

Dec-24-2017
Muthulakshmi Madhavakrishnan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டப்பயறு மசாலா செய்முறை பற்றி

தட்டப்பயறு, வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு ‌சுலபமான மசாலா. இந்த மசாலா சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் இடியாப்பத்திற்கு பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் தட்டப்பயறு
  2. 1 வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் இஞ்சி
  5. 1 தக்காளி
  6. 1/2 டீஸ்பூன் கடுகு
  7. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. சிறிது கறிவேப்பிலை
  9. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 கப் தேங்காய் பால்
  11. உப்பு தேவையான அளவு
  12. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. தட்டப்பயறை 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாக கழுவி குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அவை நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் 1/4 கப் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. அவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த தட்டப்பயறை மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  6. சிறிது கெட்டியானதும் தீயை குறைத்து தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்.
  7. சிறிது கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலா தூளை லேசாக தூவி இறக்கவும். அதிகமாக சேர்க்க வேண்டாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்