வீடு / சமையல் குறிப்பு / பொடாடோ பீஸ் சாகு

Photo of Potato Peas Sagu by Krishnasamy Vidya Valli at BetterButter
694
4
0.0(0)
0

பொடாடோ பீஸ் சாகு

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொடாடோ பீஸ் சாகு செய்முறை பற்றி

நார்த் இந்தியாவின் மிக முக்கியமான கிரேவி வெரைட்டி இது. சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ். செய்வது மிகமிக சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 3
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பட்டாணி - 3 மேஜைகரண்டி
  5. பச்ச மிளகாய் - 1 அல்லது 2
  6. பொரிகடலை - 2 மேஜைகரண்டி
  7. மஞ்சள்பொடி-1தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 தேக்கரண்டி
  9. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  10. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  12. தாளிக்க :
  13. கடுகு - 1 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 தேக்கரண்டி
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  17. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும் உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கிவைக்கவும்
  2. பொரிகடலையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் பச்ச மிளகாய் போட்டு வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி யை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்
  6. மஞ்சள்பொடி தனியா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  7. நன்றாக வதக்கியபின் பொரிகடலை பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி யை வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து விடவும்
  9. கரண்டியால் நன்றாக மசித்து செமி சாலிட் கன்ஸிஸ்டன்ஸி வந்தவுடன் இறக்கி விடலாம்
  10. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பொட்டட்டோ பீஸ் சாகு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்