Photo of Groundnut Stew by Ayesha Ziana at BetterButter
708
3
0.0(1)
0

Groundnut Stew

Dec-28-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Groundnut Stew செய்முறை பற்றி

நிலக்கடலையின் பால் வைத்து செய்த காய்கறி ஸ்டூ. ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி போன்றவற்றிற்கு நல்ல சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை நிலக்கடலை ஒரு கையளவு
  2. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  3. உருளைக்கிழங்கு 1
  4. கேரட் 1 முதல் 2
  5. நெய் 1 ஸ்பூன்
  6. கிராம்பு 1
  7. ஏலக்காய் 1
  8. பட்டை 1சிறு துண்டு
  9. பச்சை மிளகாய் 2 பெரியது
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை குக்கரில் 10 விசில் வேக வைத்து மசிக்கவும்.
  2. கேரட்டை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  3. மிக்ஸியில் நிலக்கடலை, தேங்காய், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் பிழிந்து கொள்ளவும். இது மாதிரி மேலும் 2 முறை செய்து பால் பிழியவும்.
  4. வாணலியில் நெய் ஊற்றி, கிராம்பு பட்டை ஏலக்காய் மற்றும்பச்சை மிளகாய் சேர்த்து, பின் மசித்த உருளைக்கிழங்கு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  5. கலவை இறுகியதும் கேரட், உப்பு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. இறுதியாக, பிழிந்த நிலக்கடலை-தேங்காய் பாலையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
  7. சுவையான ஸ்டூ தயார். இது ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றிற்கு நல்ல சைட் டிஷ்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-29-2017
Pushpa Taroor   Dec-29-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்