ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்) | Oats Semiya Kheer (Payasam) in Tamil

எழுதியவர் Shyamala Kumar  |  31st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Oats Semiya Kheer (Payasam) by Shyamala Kumar at BetterButter
ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்)Shyamala Kumar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

39

0

ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்) recipe

ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Oats Semiya Kheer (Payasam) in Tamil )

  • க்ரீம் பால் முழுமையாக - 1 1/2 லிட்டர்
  • சேமியா - 1/4 கப்
  • ஓட்ஸ் - 1/4 கப்
  • சர்க்கரை - 1/2 கப் (சுவைக்கு ஏற்றபடி)
  • முந்திரிபருப்பு - 5 அல்லது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டது
  • உலர் திராட்சை - 10-15
  • ஏலக்காய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  • நெய் - 1 தேக்கரண்டி

ஓட்ஸ் சேமியா கீர் (பாயாசம்) செய்வது எப்படி | How to make Oats Semiya Kheer (Payasam) in Tamil

  1. சேமியா, ஓட்ஸ், முந்திரிபருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் தனியாக வறுத்துக்கொள்க. ஒரு கனமானக் கடாயில் அல்லது பாத்திரத்தில், பாலை கொதிக்க விட்டு பாதியளவு வரும்வரை சுண்டவிடவும்.
  2. வறுத்த சேமியா, ஓட்ஸ் சேர்த்து சிம்மில் சிறிது நேரம் நன்றாக சமைக்கவும். சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயின் பக்கவாட்டைத் தொடர்ந்து சுண்டிக்கொண்டே இருக்கவும், பக்கவாட்டில் சேரும் மலாயைப் பாயாசாத்தோடு கலப்பதற்காக. இப்போது, பாயாசம் இன்னும் அதிகமாகச் சுண்டிவிடும்.
  3. முந்திரிபருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். தீயிலிருந்து எடுத்து சூடாகவோ சில்லென்றோ பரிமாறுக.

Reviews for Oats Semiya Kheer (Payasam) in tamil (0)