Photo of Sundaikkai Curry (Gravy) by Bena Aafra at BetterButter
439
5
0.0(1)
0

Sundaikkai Curry (Gravy)

Dec-30-2017
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டைக்காய் வற்றல் -200 கிராம்
  2. வெங்காயம் -100 கிராம்
  3. பூண்டு -50கிராம்
  4. புளி -எலுமிச்சை அளவு
  5. எண்ணெய்
  6. தக்காளி -3
  7. தேங்காய் விழுது
  8. மஞ்சள் தூள் -1/4tsp
  9. மிளகாய் தூள் -1/4tsp
  10. உப்பு
  11. தாழிக்கத் தேவையான பொருட்கள்;
  12. கடுகு
  13. உளுத்தம் பருப்பு
  14. சீரகம்
  15. கறிவேப்பிலை
  16. வெந்தயம்
  17. வறுத்து அரைக்கும் பொருட்கள்:
  18. மிளகாய் வற்றல்
  19. சீரகம்
  20. வெந்தயம்
  21. மல்லி விதை

வழிமுறைகள்

  1. சுண்டைக்காய் -ஐ எண்ணெயில் வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. மிளகாய் வற்றல், சீரகம்,வெந்தயம், மல்லி விதை ,4 சின்ன வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
  3. புளி-ஐ தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, போட்டு தாழித்து வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  7. தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
  8. அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
  9. குழம்பு ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்திருந்த சுண்டைக்காய் சேர்த்து கொதிக்க விட்டு ,நன்றாக சுண்டைக்காய் வெந்ததும் தேங்காய் விழுது ஊற்றி கொதிக்க விடவும்.
  10. அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு எண்ணெய் பிரியும் அளவிற்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  11. சுவையான சுண்டைக்காய் வற்றல் குழம்பு ரெடி! !!!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-31-2017
Pushpa Taroor   Dec-31-2017

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்