Photo of Corriander rice by Adhi Venkat at BetterButter
520
9
0.0(1)
0

Corriander rice

Jan-06-2018
Adhi Venkat
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி – 1 தம்ளர்
  2. கொத்தமல்லி – 1 கட்டு
  3. வரமிளகாய் – 4 (அ) 5
  4. சீரகம் – 1 டீஸ்பூன்
  5. புளி – சிறிதளவு
  6. உப்பு – தேவைக்கேற்ப
  7. எண்ணெய் – தேவைக்கேற்ப
  8. பச்சைப்பட்டாணி – 1 கையளவு
  9. தாளிக்க:- 
  10. கடுகு – சிறிதளவு
  11. கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
  13. பெருங்காயம் – சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து தண்ணீரை  வடித்துவிட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறிவைக்கவும். 
  2. நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம்,  வரமிளகாய்,உப்பு ஆகியவற்றை  மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். 
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை  தாளித்துக்கொள்ளவும்.
  4. பிறகு பச்சைப்பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைத்த கொத்தமல்லிவிழுதையும்  போட்டு நன்றாக வதக்கவும்.
  5. பச்சை வாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிறவிகிதத்தில் விட்டு கொதிக்க விடவும்.
  6. கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை  நிறுத்தி  விடவும்.
  7. பத்து நிமிடங்களுக்குப் பிறகு  குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-07-2018
Pushpa Taroor   Jan-07-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்