வீடு / சமையல் குறிப்பு / சேனை கிச்சடி

Photo of Senai kichadi by Krishnasamy Vidya Valli at BetterButter
435
4
0.0(0)
0

சேனை கிச்சடி

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேனை கிச்சடி செய்முறை பற்றி

பொங்கல் பண்டிகைக்கு கிச்சடி பச்சடி செய்வது பழக்கம். எப்போதும் போல் வெண்டைக்காய் கிச்சடி செய்வதற்கு பதில் வித்தியாசமான இந்த சேனை கிச்சடி செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஸாலட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனை பொடி சதுரமாக நறுக்கியது - 1 / 4 கப்
  2. கெட்டி தயிர் - 1 கப்
  3. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் - 1
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  7. சேனையை டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை செய்வதற்கு தேவையானஅளவு எண்ணெய்
  8. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சேனையை சதுரமாக நறுக்கி வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு டீப் ப்ரை அல்லது ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  3. மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து உப்பு மற்றும் வறுத்த சேனையையும் போட்டு தாளித்ததை சேர்க்கவும்
  4. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்