ஆலு பராத்தா | Aaloo Paratta in Tamil

எழுதியவர் Adhi Venkat  |  18th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Aaloo Paratta by Adhi Venkat at BetterButter
ஆலு பராத்தாAdhi Venkat
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

0

3 votes
ஆலு பராத்தா

ஆலு பராத்தா தேவையான பொருட்கள் ( Ingredients to make Aaloo Paratta in Tamil )

 • கோதுமை மாவு – 1கப்
 • உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
 • உப்பு – தேவையான அளவு
 • மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
 • தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • கொத்தமல்லி  இலைகள் –சிறிதளவு
 • எண்ணெய் (அ) நெய் – தேவையான அளவு

ஆலு பராத்தா செய்வது எப்படி | How to make Aaloo Paratta in Tamil

 1. கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். 
 2. உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
 3. அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது தான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணம்.
 4. பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.
 5. ஒரு உருண்டையை எடுத்து சிறிய சப்பாத்தியாக திரட்டிக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டியளவு உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து மூடி, மாவை தொட்டுக்கொண்டு பராத்தாவாக திரட்டவும்.
 6. எவ்வளவு மெலிதாக செய்ய முடியுமோ செய்யலாம். சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணையோ அல்லது நெய்யோ விட்டு வாட்டி எடுக்கவும்.

எனது டிப்:

இதற்கு சைட் டிஷ் ஆக ராய்தா எனப்படும் தயிர் பச்சடி, ஊறுகாய் அல்லது தொக்கு ஒத்துப் போகும்.

Reviews for Aaloo Paratta in tamil (0)