வீடு / சமையல் குறிப்பு / ரோஸ்டட் பெல்பெப்பர் - வால்நட் சட்னி

Photo of Roasted bellpepper - walnut chutney by Priya Satheesh at BetterButter
460
3
0.0(0)
0

ரோஸ்டட் பெல்பெப்பர் - வால்நட் சட்னி

Feb-06-2018
Priya Satheesh
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோஸ்டட் பெல்பெப்பர் - வால்நட் சட்னி செய்முறை பற்றி

சுவையான, சத்தான மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறகூடிய சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 தேக்கரண்டி எண்ணெய்
  2. 2 பெல்பெப்பர் / குடைமிளகாய்
  3. 6-7 வால்நட்
  4. 8 பச்சை மிளகாய்
  5. சில புதினா இலைகள்
  6. சிறிய இஞ்சி துண்டு
  7. சிறிய துண்டு புளி
  8. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. பெல்பெப்பரை கழுவி, அதன் மீது எண்ணெய் தடவவும்.
  2. அதனை நெருப்பில் சுட்டு எடுத்து ஆற வைக்கவும்.
  3. பிறகு சுட்ட பெல்பெப்பரை கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி துண்டு, வால்நட், புதினா இலைகள், புளி மற்றும் பெல்பெப்பரை சேர்க்கவும்.
  5. அனைத்தையும் நன்கு வதக்கவும்.
  6. வதக்கிய பொருட்களை ஆற வைத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
  7. அரைத்த சட்னியை தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்