வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் வெஜ் புலாவ்

Photo of Thengapaal veg pulao by Margaret Charles at BetterButter
279
6
0.0(0)
0

தேங்காய் பால் வெஜ் புலாவ்

Feb-15-2018
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் வெஜ் புலாவ் செய்முறை பற்றி

அதீத சுவை சேர்க்கும் தேங்காய் பால் சேர்த்து நல்ல ஒரு சுவை மிகும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி 1 1/2 கப்
  2. வெங்காயம் 1 (பெரிது) நீள வாக்கில் வெட்டியது
  3. பச்சை மிளகாய் 2 நீள வாக்கில் வெட்டியது
  4. தக்காளி 1 நீள வாக்கில் வெட்டியது
  5. இஞ்சி பூண்டு விழுது 2 tsp
  6. காளிஃளார் ஒரு கையளவு
  7. பச்சை பட்டாணி ஒரு கையளவு
  8. பீன்ஸ் 4 நீளமாக நறுக்கியது
  9. கேரட் 1 நீளமாக நறுக்கியது
  10. தேங்காய் பால் (இரண்டாம்) 1 கப்
  11. மஞ்சள் தூள் 1/2 tsp
  12. வத்தல் தூள் 1 tsp
  13. கரம் மசாலா 1/4 tsp
  14. மராட்டி மொக்கு 1
  15. ஜாதி பத்திரி சிறிது
  16. பிரிஞ்சி இலை 1 சிறிது
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. எண்ணெய் 2 tbsp

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி ஊற வைக்கவும்
  2. ஒரு குக்கெரில் என்னை சேர்த்து அதில், மராட்டி மொக்கு, ஜாதி பத்திரி, பிரிஞ்சி இலை போட்4 தாளிக்கவும்
  3. பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  7. பின்னர் மஞ்சள் தூள்,வத்தல் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்
  8. பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து (தண்ணீரை வடித்து பின் சேர்க்கவும்) வதக்கவும்
  9. எடுத்து வைத்த தேங்காய் பால் சேர்த்து, பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்; தேங்காய் பாலையும் தண்ணீர் கணக்கில் தான் சேர்க்கணும்; 1 1/2 கப் அரிசிக்கு தேங்காய் பாலுடன் சேர்த்து 3 கப் தண்ணீர்)கலக்கவும்
  10. பின்னர் உப்பு சரி பார்த்து குக்கரை மூடி வெயிட் வைக்கவும்
  11. Full flame ல் ஒரு விசில் வந்ததும் சிம் இல் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  12. ஆவி சென்றதும் துறந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்