Photo of Brinjal Curry by Mohanakumari Dandapani at BetterButter
555
6
0.0(1)
0

Brinjal Curry

Feb-15-2018
Mohanakumari Dandapani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Brinjal Curry செய்முறை பற்றி

கத்தரிக்காய் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 5
  2. தக்காளி 2
  3. பெரிய வெங்காயம் 2
  4. சின்ன வெங்காயம் 5
  5. வற மிளகாய் 2
  6. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  7. மல்லி தூள் 1 ஸ்பூன்
  8. புளி கரைசல் 1/2 கப்
  9. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  10. கடுகு1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  12. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  13. கருவேப்பிலை 1 கொத்து
  14. எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை மேல் பகுதியில்நான்காக பிளந்து வைக்கவும்.
  2. சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும்
  3. பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து வைக்கவும்.
  4. தக்காளியை விழுதாக அரைத்து வைக்கவும்
  5. கத்தரிக்காயை எண்ணெய் விட்டு காய்ந்ததும் நன்கு வதக்கி வைக்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  7. சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வரமிளகாய் சேர்த்து கலந்து வதக்கவும்.
  9. பின்னர் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  11. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  12. மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
  13. புளி தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  14. வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து கொதிக்க விடவும்.
  15. சுவையான கத்தரிக்காய் குழம்பு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jothivelu sangeetha
Jun-10-2018
jothivelu sangeetha   Jun-10-2018

Superb

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்