வீடு / சமையல் குறிப்பு / குடமிளகாய் சாதம்

Photo of Capsicum rice by Adhi Venkat at BetterButter
671
4
0.0(0)
0

குடமிளகாய் சாதம்

Feb-16-2018
Adhi Venkat
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குடமிளகாய் சாதம் செய்முறை பற்றி

குடமிளகாயில் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குடமிளகாய் - 2
  2. வெங்காயம் - 2
  3. சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி
  4. கரம்மசாலா - விருப்பமிருப்பின் 1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. கடுகு - 1/2 தேக்கரண்டி
  9. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை - சிறிதளவு
  13. சாதம் - 1 டம்ளர் அரிசியில் வடித்தது
  14. தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குடமிளகாயை விதைகளை அகற்றி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
  4. சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
  5. அடுத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு பெருங்காயம் சேர்க்கவும்.
  6. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  8. அடுத்து குடமிளகாய் சேர்க்கவும்.
  9. இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
  10. தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
  11. இதில் வடித்து ஆறவைத்த சாதத்தை போட்டு பிரட்டவும்.
  12. சுவையான குடமிளகாய் சாதம் தயார்.
  13. இதனுடன் அப்பளம் மற்றும் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்