Photo of Stuffed Brinjal Gravy by Bena Aafra at BetterButter
509
8
0.0(1)
0

Stuffed Brinjal Gravy

Feb-16-2018
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Stuffed Brinjal Gravy செய்முறை பற்றி

கத்தரிக்காய் என்றால் எல்லோருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் தான் ஞாபகத்தில் வரும். பலரும் பலவிதமான முறையில் செய்வோம். சின்ன வித்தியாசமான முறைப்படி எனக்கு தெரிந்த முறையிலே செய்துள்ளேன். எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. ..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் -10
  2. சின்ன வெங்காயம் -20
  3. தேங்காய் -1/2மூடி
  4. தனியாத்தூள்-2ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
  6. பொட்டுகடலை or முந்திரி or கசகசா-1ஸ்பூன்
  7. புளி -தேவையான அளவு
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. பூண்டு பல் -5(தட்டியது )
  11. சீரகம் -1ஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் -6
  13. கடுகு -1ஸ்பூன்
  14. கறிவேப்பிலை -சிறிதளவு
  15. மிளகாய் தூள் -1/4ஸ்பூன்
  16. பட்டை ஏலக்காய் தூள் -1/4ஸ்பூன்
  17. இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  18. சோம்பு
  19. தக்காளி -நறுக்கியது

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் சுத்தம் செய்து நான்காக பிளந்து வைக்கவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
  3. அதனுடன் துருவிய தேங்காய் ,பொட்டுகடலை, சோம்பு,தனியாத்தூள் சேர்த்து அரைக்கவும்.
  4. மசாலா விழுது
  5. பின் அரைத்த விழுதை எடுத்து நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயில் நிரப்பவும்.20நிமிடம் ஊறவிடவும்.
  6. தாழிக்க தேவையான பொருட்கள்,தட்டிய பூண்டு, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு .எடுக்கவும்.
  7. பின் அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி பூண்டு விழுது ,எல்லாம் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள்;,பட்டை ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி சேர்க்கவும். மிளகாய் தூள் சேர்க்கவும்.
  9. ' நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த கத்தரிக்காய் சேர்க்கவும்.
  10. எண்ணெயிலேயே கத்தரிக்காய் நன்றாக வதக்கவும். பின் மீதமுள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  11. பின் சிறிது புளி கரைசல், உப்பு அளவாக சேர்த்து கொதிக்க விடவும்.
  12. கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
  13. சூடான சுவையான ஸ்ஃப்டு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார். ....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Feb-25-2018
Star Tamil   Feb-25-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்