வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மெழுக்குபுரட்டி (பொரியல்)

Photo of Vazhakkai Mezhukkupuratti by Priya Tharshini at BetterButter
573
3
0.0(0)
0

வாழைக்காய் மெழுக்குபுரட்டி (பொரியல்)

Feb-19-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மெழுக்குபுரட்டி (பொரியல்) செய்முறை பற்றி

பாரம்பரியமான பொரியல் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் - 2
  2. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. கருவேப்பிலை - சிறிது
  5. சின்ன வெங்காயம் - 10
  6. பூண்டு - 3 பல்
  7. வி.மிளகாய் - 2
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் , பூண்டு இரண்டையும் தோல் நீக்கி அத்துடன் வி.மிளகாயை மிக்ஸியில் சேர்க்கவும்.
  2. தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் வாழைக்காய்,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  4. காய் முக்கால் வேந்ததும் தண்ணீரை வடிகட்டவும்.
  5. கடாயில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பிலை தாளிக்கவும்.
  6. அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  7. பச்சை வாசனை போகும் வரை சிறு தீயில் வதக்கவும்.
  8. வேக வைத்த வாழைக்காய் சேர்க்கவும்.
  9. மெதுவாக பிரட்டி 3 நிமிடம் வதக்கவும். பிறகு அடுப்பை அனைக்கவும்.
  10. வாழைக்காய் மெழுக்குபுரட்டி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்