Photo of Turkey berry veg tikkies by Adaikkammai Annamalai at BetterButter
427
5
0.0(1)
0

Turkey berry veg tikkies

Feb-27-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுண்டக்காய் - ஒரு கை அளவு
  2. கடலை பருப்பு - 1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  5. தேங்காய் கீறல் பொடியாக - சிறிதளவு
  6. வரமிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்றார் போல்)
  7. உப்பு - சிறிதளவு
  8. சோம்பு - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் சுண்டக்காய் எடுத்து இரண்டாக நறுக்கி தண்ணியில் போடவும் அப்போதுதான் கருக்காது
  2. பின் கடலை பருப்பை ஊற வைக்கவும் அரை மணி நேரம்
  3. பின் வெங்காயம் நறுக்கி எடுத்து கொள்ளுங்கள், மற்றும் தேங்காய் கீறல் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள்
  4. அதன் பின் ஊறவைத்த பருப்பை அலசி தண்ணியை இருத்து பருப்பை எடுத்து சோம்பு, வரமிளகாய், பருப்பு, இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து அரைக்கவும்
  5. அரைத்த விழுதுடன் வெங்காயம், தேங்காய் கீறல், நறுக்கி வைத்த சுண்டக்காய் சேர்த்து பிசைந்து வைக்கவும்
  6. பின் இருப்பு சட்டியில் எண்ணெய்யை கவ வைத்து 5 அல்லது 6 ஆக தட்டி போடவும் சிவக்க வெந்தவுடன் எடுத்து பரிமாறலாம்
  7. சுவையான ஆரோக்கியமான சுலபமான சுண்டக்காய் வெஜ் டிக்கி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

awesome recipe!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்