வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பட்டாணி பனீர்

Photo of Murg mutter paneer by Asiya Omar at BetterButter
348
8
0.0(0)
0

சிக்கன் பட்டாணி பனீர்

Mar-05-2018
Asiya Omar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பட்டாணி பனீர் செய்முறை பற்றி

நல்லதொரு பக்க உணவு.புரோட்டீன் சத்து மிக்கது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் - 150 கிராம்
  2. பட்டாணி -1/2 கப்
  3. பனீர் -100 கிராம்
  4. இஞ்சி பூண்டு-1 தேக்கரண்டி
  5. தயிர்-1 மேஜைக்கரண்டி
  6. தக்காளி சாஸ் -2 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  8. மல்லி தூள் -2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  10. பட்டை-1 துண்டு
  11. ஏலக்காய் -2
  12. பச்சை மிளகாய் -1
  13. மல்லி இலை - சிறிது
  14. எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
  15. உப்பு சுவைக்கு.

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் இஞ்சி பூண்டு விழுது,ஏலம்,பட்டை,மிளகாய் தூள்,மல்லித்தூள்,மஞ்சள் தூள்,தயிர்,தக்காளி சாஸ்,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  2. பனீர்,சிக்கன்,பட்டாணி அலசி தயாராய் இருக்கட்டும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தயார் செய்த கலவை சேர்க்கவும்.
  4. அத்துடன் சிக்கன் சேர்த்து பாதி வெந்து வரும் பொழுது பட்டாணி சேர்த்து வேக வைக்கவும்
  5. பட்டாணி சிக்கன் இரண்டும் வெந்த பின்பு பனீர் சேர்த்து பிரட்டவும்.
  6. மூன்றும் மசாலாவோடு நந்கு கலந்த பின்பு நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  7. அடுப்பை அணைக்கவும்.சுவையான சிக்கன் பட்டாணி பனீர் (மூர்க் மட்டர் பனீர் )தயார்.
  8. ரொட்டி,நானுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்