Photo of Mushroom Lasagne by Priyadharshini Selvam at BetterButter
343
7
0.0(2)
0

Mushroom Lasagne

Mar-08-2018
Priyadharshini Selvam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mushroom Lasagne செய்முறை பற்றி

மஷ்ரூம் வைத்து லசானியா செய்ய சிம்பிள் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1/2 கப்
  2. பால் 1 கப்
  3. கிரீம் சீஸ் 1/4 கப்
  4. லசானியா - 6
  5. சில்லி டோமடோ சாஸ் - 1/2 கப்
  6. மொசாறெல்லா சீஸ் - 1/2 கப்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  9. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  10. மிக்ஸட் இத்தாலியன் ஹேர்ப்ஸ்- 2 தேக்கரண்டி
  11. சர்க்கரை- 1 தேக்கரண்டி
  12. வெங்காயம்-1 நறுக்கியது+ 1/2 முழுதாக
  13. கிராம்பு 3
  14. பிரிஞ்சி இலை 3
  15. பூண்டு-5
  16. குடை மிளகாய்-1
  17. பட்டன் காளான் - 2 கப்
  18. கொத்துமல்லி/பார்ஸ்லி இலை - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்
  2. உருகியதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வணக்கவும்.
  3. இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளறவும்.
  4. வதங்கியதும் நறுக்கிய காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மிக்ஸட் இத்தாலிய ஹர்ப் சேர்த்து கிளறி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  6. மற்றொரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருக்கவும்.
  7. இதில் மைதா மாவு சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  8. நிறம் லேசாக மாறும் வரை கிளறவும்
  9. இதில் பால் சேர்த்து நன்கு கலக்கவும்
  10. மைதா மாவு பாலுடன் நன்கு கரைந்ததும் 2 பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
  11. ஒரு வெங்காயத்தை வெட்டி அதில் 3 கிராம்பு குத்தி அதை சேர்க்கவும்.
  12. தேவையான அளவு உப்பு, சர்க்கரை, தேவைப்பட்டால் பால் சேர்த்து வொயிட் சாஸ் ரெடி செய்யவும். அதை வடிகட்டவும்.
  13. வடிக்கட்டிய சாஸை மீண்டும் அடுப்பில் வைத்து கிரீம் சீஸ் சேர்த்து கலக்கவும்.
  14. வொயிட் சாஸ் தயாரானதும் இதில் வதக்கி வைத்திருந்த காளான் கலவையை சேர்த்து கலக்கவும். மேலும் சிறிது மிக்ஸட் ஹேர்ப் சேர்த்து கலக்கவும்.
  15. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி சாஸ் ஊற்றவும்.
  16. அதன் மேல் லசானியா ஷீட் வைக்கவும். ( நான் இன்ஸ்டன்ட் பாஸ்தா உபயோகித்தேன்)
  17. இதன் மேல் சில்லி தக்காளி சாஸ் ஊற்றவும்.
  18. இதன் மேல் வொயிட் சாஸ் சேர்த்து இதே போல் மற்ற லசானியா ஷீட் களை அடுக்கவும்
  19. கடைசியாக மொசாறெல்லா சீஸ் பரப்பி, கொத்தமல்லி, மிக்ஸட் ஹேர்ப் தூவவும்
  20. அலுமினிய போயில் வைத்து மூடி முற்சூடு செய்த அவனில் 180℃ இல் 20 நிமிடம் வைக்கவும்
  21. 20 நிமிடம் கழித்து பாயில் எடுத்துவிட்டு 200℃ இல் 5 நிமிடம் வைக்கவும்
  22. எளிதான மஷ்ரூம் லசானியா தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jayanthi kadhir
Mar-08-2018
Jayanthi kadhir   Mar-08-2018

Nice

Paramasivam Sumathi
Mar-08-2018
Paramasivam Sumathi   Mar-08-2018

Kalakuringa superb....

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்