வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பராத்தா

Photo of Aloo Paratha by T.n. Lalitha at BetterButter
263
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு பராத்தா

Mar-23-2018
T.n. Lalitha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பராத்தா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு பராத்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 2 கப்
  2. உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்தது)
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  5. கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  6. மல்லி இலை - சிறிதளவு
  7. சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  8. இஞ்சி - சிறிதளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும். உருளையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றுடன் எல்லா தூள் வகைகள், உப்பு சேர்த்து உருளையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். இதுவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதே எண்ணிக்கை மாவுருண்டைகளை பிடித்து வைக்கவும். மாவுருண்டை உருளை உருண்டையை விட பெரியதாக இருத்தல் அவசியம். மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் கலவையை வைத்து மூடவும். நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும். கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் தேய்த்து (விருப்பப்பட்டால்) பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுப்புறம் திருப்பி போட்டு எடுக்கவும். சூடாக பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்