ஆலு தம் | Aloo dum in Tamil

எழுதியவர் kamala shankari  |  27th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Aloo dum by kamala shankari at BetterButter
ஆலு தம்kamala shankari
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

ஆலு தம் recipe

ஆலு தம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo dum in Tamil )

  • உருளைக்கிழங்கு 2
  • தக்காளி 1
  • மிளகாய் 3
  • இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  • எண்ணெய் 3 தேக்கரண்டி
  • சீரகம் 1 தேக்கரண்டி
  • பட்டை 2 துண்டு
  • வெங்காயம் 1
  • கொத்தமல்லி சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

ஆலு தம் செய்வது எப்படி | How to make Aloo dum in Tamil

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து தோலுரித்து சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. தக்காளி பொடியாக நறுக்கவும்
  3. மிளகாய் வெங்காயம் பூண்டு பட்டை நன்கு நைசாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கியதும் உருளைக்கிழங்கு அரைத்த விழுது உப்பு சேர்த்து கிளறவும்
  6. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  7. கரண்டியால் எடுக்கும் பதத்திற்கு இருக்க வேண்டும்
  8. கொத்தமல்லி தூவி இறக்கவும்

எனது டிப்:

சிறு உருளைக்கிழங்கு பயன்படுத்தி கொள்ளலாம்

Reviews for Aloo dum in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.