தம் ஆலு | Dum Aloo in Tamil

எழுதியவர் Smita Pramanik  |  14th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Dum Aloo by Smita Pramanik at BetterButter
தம் ஆலுSmita Pramanik
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

154

0

தம் ஆலு recipe

தம் ஆலு தேவையான பொருட்கள் ( Ingredients to make Dum Aloo in Tamil )

  • 10/12 சிறிய அளவிலான உருளைக்கிழங்குகள்
  • 1 பெரிய நறுக்கிய வெங்காயம்
  • 1 பெரிய தக்காளி நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 10/12 முந்திரி பருப்பு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • சுவைக்கேற்ற உப்பு
  • சுவைக்கேற்ற மஞ்சள் தூள்
  • சுவைக்கேற்ற மிளகாய்த் தூள்

தம் ஆலு செய்வது எப்படி | How to make Dum Aloo in Tamil

  1. உருளைக்கிழங்குகளை வேகவைக்கவும்.
  2. கடாயை கேஸ் ஸ்டவில் சூடுபடுத்தி 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும்.
  3. சீரகம் வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
  4. இஞ்சிப்பூண்டு விழுது சேர்க்கவும். 1/2 நிமிடம் வறுத்து நறுக்கிய தக்காளியையும் முந்திரி பருப்புகளையும் சேர்க்கவும்.
  5. சில நிமிடங்களுக்குப் பிறகு வறுத்த அனைத்து மசாலாக்களையும் ஒரு மிக்சரில் போட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  6. மசாலா சாந்தை வறுத்து அனைத்து கரம் மசாலாக்களையும், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் முறையாக கலந்துகொள்ளவும்.
  8. 1 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடியால் மூடி மீண்டும் 6ல் இருந்து 7 நிமிடங்கள் வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Reviews for Dum Aloo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.