சிகப்பி | Sigappi (Authentic village style chicken gravy) in Tamil

எழுதியவர் Umamaheswari Chellamuthu  |  11th May 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Sigappi (Authentic village style chicken gravy) by Umamaheswari Chellamuthu at BetterButter
சிகப்பிUmamaheswari Chellamuthu
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

1

சிகப்பி recipe

சிகப்பி தேவையான பொருட்கள் ( Ingredients to make Sigappi (Authentic village style chicken gravy) in Tamil )

 • நாட்டுக்கோழி 1/2 கிலோ
 • நல்லெண்ணெய்-1 அல்லது 2 ஸ்பூன்
 • சின்ன வெங்காயம் (முழுவதும் உறித்தது)
 • இஞ்சி/பூண்டு விழுது -தலா 1ஸ்பூன்
 • கருவேப்பிலை-2 கொத்து
 • சோம்பு -1 ஸ்பூன்
 • பட்டை-1துண்டு
 • கிராம்பு ,ஏலக்காய் -4
 • மிளகாய் தூள் -1ஸ்பூன்
 • மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
 • தக்காளி -3 அல்லது 4
 • தேங்காய் பால் -1கப்
 • உப்பு -தேவையான அளவு

சிகப்பி செய்வது எப்படி | How to make Sigappi (Authentic village style chicken gravy) in Tamil

 1. சின்ன வெங்காயத்தை முழுதாக உறித்து கொள்ளவும்
 2. நாட்டுகோழியை நன்றாக மஞ்சள் பூசி கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்
 3. தக்காளி பழத்தை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து தோலுரித்து அரைத்து வைத்து கொள்ளவும்
 4. ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொறிய விடவும்
 5. அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொறிய விடவும்
 6. அதில் முழுதான சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
 7. கருவேப்பிலை சேர்க்கவும்
 8. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும்
 9. நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து ஒருசேர வதக்கி உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
 10. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்
 11. தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நீர் சேர்த்து பின் மூடி 20நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைக்கவும்
 12. 20நிமிடம் கழித்து கோழி நன்கு வெந்ததும் பிழிந்து எடுத்த தேங்காய் பால் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை உடனே அணைத்து விடவும்
 13. கருவேப்பிலை தூவி இறக்கி பரிமாறலாம்

எனது டிப்:

தேங்காய் பால் சேர்த்து வெகு நேரம் அடுப்பில் வைத்திருக்க கூடாது

Reviews for Sigappi (Authentic village style chicken gravy) in tamil (1)

Pushpa Taroor2 years ago

Good
Reply
Umamaheswari Chellamuthu
2 years ago
mikka nandri pushpa taroor

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.