பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல் | Piroh (spicy) Nepali aloo dum- street food style in Tamil

எழுதியவர் Sabina Saby Tamang  |  5th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Piroh (spicy) Nepali aloo dum- street food style by Sabina Saby Tamang at BetterButter
பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல்Sabina Saby Tamang
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

32

0

பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல் recipe

பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Piroh (spicy) Nepali aloo dum- street food style in Tamil )

 • தண்ணீர்
 • உப்பு
 • 1 டீக்கரண்டி கருப்பு சீரகம் (கலோங்கி)
 • ஒரு துளி சிகப்பு உணவுகலர் ( வண்ணதிற்காக மட்டும்)
 • 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 • 1 டீக்கரண்டி மிளகாய் விதைகள்
 • 2 டீக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் (தேவையன்றல் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்)
 • கடுகு எண்ணெய்( நல்ல சுவைக்காக); இல்லையென்றல் சாதாரண எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளவும்
 • 1/2 கிலோ நடுத்தர அளவு உருளைக்கிழங்கு

பிரொஹ்(காரம்) நேபாளி உருளைக்கிழங்கு தம்- தெருகடை உணவு ஸ்டைல் செய்வது எப்படி | How to make Piroh (spicy) Nepali aloo dum- street food style in Tamil

 1. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை 3 விசில் வரை அதிக தீயில் வேகவிடவும். (இதற்கு 10 நிமிடங்கள் வரை ஆகலாம்)
 2. உருளைக்கிழங்குகள் வெந்த பிறகு, ஆறுவதற்காக தனியாக வைத்து விடவும். இதற்கு இடையில் உருளைக்கிழங்கு தம்மிர்கான கலவையை தயார் செய்துக் கொள்வோம்.
 3. சின்ன கிண்ணத்தில் காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிகப்பு உணவுகலர், உப்பு மற்றும் தண்ணீர்( கிண்ணத்தின் கால் பங்கு) சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். (இது என் அம்மாவின் தனிப்பட்ட ஆலு தம் கலவை செய்யும் முறை)
 4. ஆலு தம் கலவையைத் தனியாக வைத்துவிடவும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் அதன் தோள்களை உரித்து நடுத்தரமான சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.(உருளைக்கிழங்கை 10-15 நிமிடங்கள் குளிரூட்டியில் வைக்குமாறு நான் பரிந்துரைப்பேன், எனவே அது உறுதியாக இருக்கும்)
 5. இப்போது கடாயி அல்லது பாத்திரத்தில் சூடாக்கி பின்பு அதில் சிறிது கடுகு எண்ணெய் அல்லது சாதாரண எண்ணெய் சேர்த்து சிறிது கருப்பு சீரகமும்(கலோங்கி) சேர்த்து அது வெடிக்க விடவும்.
 6. வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எண்ணெய் மற்றும் கருப்பு சீரகத்தில் கலக்கும் அளவிற்கு லேசாக வறுத்துக்கொள்ளவும்
 7. இப்போது கலவையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். அதை நன்கு மூடி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும்.
 8. இது குழம்பு செய்யும் முறையைப் போன்றது அதனால் இதை முற்றிலும் கெட்டியாக செய்ய வேண்டாம். கடைசியாக அதிகமான காரத்துக்கு மிளகாய் விதைகளை சேர்த்துக் கொள்ளவும். ( இது நானாக சேர்த்துக் கொண்ட கூடுதல் பொருளாகும்.)
 9. இப்போது நன்றாக கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.

Reviews for Piroh (spicy) Nepali aloo dum- street food style in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.