Home / Recipes / Red keerai koottu

Photo of Red keerai koottu by Krishnasamy Vidya Valli at BetterButter
934
5
0.0(0)
0

Red keerai koottu

Feb-16-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Red keerai koottu RECIPE

கீரை என்றாலே பச்சை நிறத்தில் தான் இருக்கணுமா? சிவப்பு வண்ணத்திலும் இருக்கலாமே!. குமரி மாவட்டத்தில் உள்ள ஊர் செண்பகராமன்புதூர். அந்த ஊரில் இந்த கீரை வகை அதிகமாக விளையும். மற்ற கீரையை விட சுவை அதிகம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது இந்த கீரை. தாளிப்பதை தவிர வேறு எதற்கும் எண்ணெய் பயன்படுத்தப்படவில்லை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிவப்பு கீரை -1 கட்டு
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  4. துவரம் பருப்பு/பாசி பருப்பு - 2 மேஜைக்கரண்டி
  5. அரைக்க
  6. தேங்காய் துருவல் -4 மேஜைக்கரண்டி
  7. சீரகம் -3/4 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் -2
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  11. கடுகு -3/4 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -3/4 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல் -1
  14. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. கீரையை நன்றாக அலம்பி நறுக்கிக்கொள்ளவும்
  2. தண்டு பகுதியை வீணாக்காமல் எடுத்து வைக்கவும். புளிக்குழம்பில் போட்டால் அருமையாக இருக்கும். சிறுசிறு தண்டுகளை கீரையோடு சேர்த்தே நறுக்கிக்கொள்ளவும்
  3. கட்டி பெருங்காயம் மற்றும் அளவாக தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக்கொள்ளவும்
  5. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  6. கீரை பாதி வெந்ததும் உப்பு சேர்த்து மசித்துக்கொள்ளவும்
  7. அரைத்த விழுதை சேர்க்கவும்
  8. வேகவைத்த பருப்பு சேர்க்கவும்
  9. எல்லாம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
  10. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமான சிவப்பு கீரை கூட்டு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE