வெண்பொங்கல் | Ven pongal in Tamil

எழுதியவர் Aparna Prakash  |  9th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ven pongal by Aparna Prakash at BetterButter
வெண்பொங்கல்Aparna Prakash
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

165

0

Video for key ingredients

    வெண்பொங்கல் recipe

    வெண்பொங்கல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ven pongal in Tamil )

    • 1/2 கப் பச்சரிசி
    • 1/8 கப் பாசிப்பயிர்
    • 1 1/2 கப் தண்ணீர்
    • 1 தேக்கரண்டி சீரகம்
    • 1/2 தேக்கரண்டி சீரகப்பொடி (விரும்பம் சார்ந்தது)
    • 6-7 முழு கடுகு
    • 2 தேக்கரணடி பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி
    • 1+1/4 தேக்கரண்டி நெய்
    • 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்
    • சுவைக்கேற்ற உப்பு
    • அலங்கரிக்க முந்திரி பருப்பு

    வெண்பொங்கல் செய்வது எப்படி | How to make Ven pongal in Tamil

    1. அரிசியையும் பருப்பையும் கழுவி பிரஷர் குக்கரில் வேகவைக்கவும், உப்பு, மிளகு, சீரகப்பொடி (பயன்படுத்தினால்) சேர்த்து.
    2. 6 விசிலுக்கு வேகவைக்கவும் (சாதம் மற்றும் பயன்படுத்திய குக்கரைப் பொறு நேரம் மாறுபடும்)
    3. குக்கரை எடுத்துவைக்கவும், பிரஷர் அடங்கும்வரை.
    4. கணமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் நடுத்திர சூட்டில் சூடுபடுத்தி 1 தேக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
    5. சீரகம் சேர்த்து வெடிக்கவைக்கவும். பொறித்தல் அடங்கியதும், சாதம்-பருப்பு கலவையைக் கலந்து நன்றாகக் கலக்கவும். முடிந்தளவிற்கு கலவை மசிக்கப்படவேண்டும்.
    6. ¼ தேக்கரண்டி நெய் ஒரு சிறிய வானலியில் சூடுபடுத்திக்கொள்க. முந்திரிபருப்பு சேர்த்து இரண்டொரு நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த முந்திரிபருப்பை மசித்தக் கலவையோடு சேர்த்து தேங்காய் சட்டினி/சாம்பார், வடையுடன் சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    நல்லெண்ணெய் நேர்த்தியான நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கும், நெய்யுடன் மிக நேர்த்தியானதாகும்.

    Reviews for Ven pongal in tamil (0)