வெண்பொங்கல் | Ven Pongal or Khara Pongal in Tamil

எழுதியவர் Alka Jena  |  14th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ven Pongal or Khara Pongal by Alka Jena at BetterButter
வெண்பொங்கல்Alka Jena
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

78

0

வெண்பொங்கல் recipe

வெண்பொங்கல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ven Pongal or Khara Pongal in Tamil )

  • 1/2 கப் அரிசி
  • 1/2 கப் பாசிப்பயிர்
  • தண்ணீர் - 4 கப்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி துருவப்பட்ட இஞ்சி
  • தாளிப்புக்கு:
  • 2 தேக்கரண்டி நெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • 8-9 கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய், பிளக்கப்பட்டது
  • 1 தேக்கரண்டி கரடுமுரடாக அரைக்கப்பட்ட கருப்பு மிளகு

வெண்பொங்கல் செய்வது எப்படி | How to make Ven Pongal or Khara Pongal in Tamil

  1. அரிசியைக் கழுவி பாசிப்பயிரை பிரஷர் குக்கரில் சற்றே வாசம் வெளிவரும்வரை வெறுமனே வறுக்கவும்.
  2. அரிசி, 4 கப் தண்ணீர், இஞ்சி, உப்பு ஆகியவற்றை பிரஷர் கு்ககரில் நன்றாக வேகவைக்கவும்.
  3. ஆறியதும், பிரஷர் கு்ககரைத் திறந்து பொங்கலைச் சற்றே மசித்துக்கொள்ளவும், அப்போதுதான் சற்றே கூழாக இருக்கும். ஊற்றும் பதத்திற்கு வர அதிகமாகத் தண்ணீர் சேர்க்க வேண்டியது இருக்கும்.
  4. ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்தவும். நெய் சூடானதும், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அவை சில விநாடிகளுக்கு வெடிக்கட்டும். தாளிப்பைப் பொங்கலில் ஊற்றவும்.
  5. பரிமாறுவதற்கு முன் கலந்து சிம்மில் ஒரு நிமிடம் வைக்கவும். தேங்காய் ரைத்தா, அச்சாருடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Ven Pongal or Khara Pongal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.