இறால் மிளகுக் குழம்பு | Prawns Pepper Gravy in Tamil

எழுதியவர் Mahi Venugopal  |  23rd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Prawns Pepper Gravy by Mahi Venugopal at BetterButter
இறால் மிளகுக் குழம்புMahi Venugopal
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

142

0

இறால் மிளகுக் குழம்பு recipe

இறால் மிளகுக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Prawns Pepper Gravy in Tamil )

 • சுவைக்கேற்ற உப்பு
 • எண்ணெய் - 5 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை - 1 இன்ச்
 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
 • முத்து வெங்காயம் - 10
 • மிளகு - 1/2 தேக்கரண்டி
 • சோம்பு - 1 தேக்கரண்டி (சேர்ப்பதற்கு முன் புடைத்துக்கொள்ளவும்)
 • இஞ்சிப் பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
 • தக்காளி - 3 பொடியாக நறுக்கப்பட்டது
 • வெங்காயம் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
 • இறால் - 200 கிராம்

இறால் மிளகுக் குழம்பு செய்வது எப்படி | How to make Prawns Pepper Gravy in Tamil

 1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தவும். முத்து வெங்காயம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு இஞ்சிப் பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து மீண்டும் வதக்கவும். அதன்பின்னர் அதை ஆறவிட்டு மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. இப்போது மீண்டும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தியபிறகு சோம்பு சேர்த்து பொரிக்கவிடவும். அதன்பின் வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். அவை கூழாக ஆனதும் இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும், மசாலாக்கள் நன்றாக வேகட்டும்.
 3. பச்சை வாடை போவதைப் பார்த்தால், தயாரித்த மென்மையானச் சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 4. இப்போது இறலைச் சேர்த்து சற்றே 7 நிமிடங்களுக்கு மட்டும் அதற்கு மேல் வேண்டாம், வேகவைக்கவும்.
 5. அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லி சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

புதிய இஞ்சிப் பூண்டு விழுதைப் பயன்படுத்தவும் சிறப்பான ருசிக்கு....

Reviews for Prawns Pepper Gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.