வீடு / சமையல் குறிப்பு / பரங்கி சம்பார் அடை

Photo of Pumkin adai by Balajayasri Dhamu at BetterButter
381
0
0.0(0)
0

பரங்கி சம்பார் அடை

Oct-23-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கி சம்பார் அடை செய்முறை பற்றி

பரங்கி காய் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கி காய்1/4காய்
  2. இட்லிஅரிசி250கி
  3. வரமிளகாய்10
  4. உப்புதேவையான அளவு
  5. புளி எலிமிச்சை அளவு
  6. கடுகு
  7. கறிவேப்பிலை1கொத்து
  8. எண்ணெய் பொரிக்க
  9. கடலைப்பருப்பு3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பரங்கி காய்தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அரிசி வெந்நீரில் 5மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. புளியை ஊறவைத்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரிந்த பரங்கி காய்,அரிசி, வரமிளகாய், புளி, உப்பு போட்டு முறுக்கு மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  5. கடலை பருப்பு ஊற வைத்து கொள்ள வேண்டும்
  6. அரைத்த மாவை ஒரு காட்டன் துணியில் போட்டு கட்டி வைத்து கொள்ள வேண்டும்
  7. 1மணி நேரம் பிறகு சற்று மாவில் உள்ள தண்ணீர் வடிந்து கெட்டியாக ஆனதும்
  8. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
  9. ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  10. பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  11. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தேய்த்து தட்டிபோடவேண்டும்
  12. நன்கு பதமாக வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  13. இப்போது பரங்கி காய் சம்பார் அடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்