வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் புளி குழம்பு

Photo of Ladies finger - tamirend curry. by Karuna pooja at BetterButter
712
1
5.0(0)
0

வெண்டைக்காய் புளி குழம்பு

Dec-03-2018
Karuna pooja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் புளி குழம்பு செய்முறை பற்றி

எளிதில் ,சுவையாக செய்யக்கூடிய குழம்பு .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 250 கி
  2. புளி சிறிதளவு
  3. சின்ன வெங்காயம் 100 கி
  4. தேங்காய் 2 துண்டுகள்
  5. பூண்டு 25 கி
  6. தக்காளி 2
  7. மிளகாய் தூள் 1 ½ ஸ்பூன்
  8. மல்லி தூள் 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. நல்லெண்ணெய் 4 ஸ்பூண்
  11. வெந்தயம் 1 ஸ்பூன்
  12. கல் உப்பு
  13. கருவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. இளம் வெண்டைக்காயாக தேர்வு செய்து 1 ½ இன்ச் துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.
  2. நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்
  3. இடையில் புளியை ஊற வைக்கவும்
  4. அதே கடாயில் சின்ன வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  6. இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. இதனை ஆறவிடவும்
  8. ஆறியதும் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  9. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் கரேவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  10. இதில் அரைத்த விழுது , மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு
  11. பின்னர் வெண்டைக்காய் உப்பு சேர்த்து 5 நிமிடத்திற்கு முடி வைத்து இறக்கவும்......
  12. இது சாதம்,இட்லி மற்றும் தோசையுடனும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்