வீடு / சமையல் குறிப்பு / ரவா புளிப்பொங்கல்

Photo of RAVA PULI PONGAL by Radha Balu at BetterButter
1023
0
0.0(0)
0

ரவா புளிப்பொங்கல்

Jan-29-2019
Radha Balu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா புளிப்பொங்கல் செய்முறை பற்றி

மிக எளிதாக செய்யக் கூடிய காரசாரமான புளிப்பு சுவையுடனான பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவா ...1 கப்
  2. புளி ... சிறு எலுமிச்சை அளவு
  3. நல்லெண்ணெய் ... 6 டீஸ்பூன்
  4. தாளிக்க....
  5. பெருங்காயப்பொடி ... 1/8 டீஸ்பூன்
  6. கடுகு ... 1டீஸ்பூன்
  7. கடலைப் பருப்பு ... 1 டீஸ்பூன்
  8. நிலக்கடலை ... 1டீஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் ... 3
  10. மோர்மிளகாய்...2
  11. மஞ்சள்பொடி ... 1/2 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை ... 2கொத்து
  13. உப்பு ... தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 2 டீஸ்பூன் நல்லெண்ணையில் ரவையை சிவக்க வறுக்கவும்.
  2. புளியை ஒன்றரை கப் நீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. மீதமுள்ள எண்ணையைக் காயவைத்து அதில் பெருங்காயம், கடுகு போட்டு வெடித்ததும், அதில் கடலைப் பருப்பு, கடலை சேர்த்து சிவக்கவறுக்கவும்.
  4. அதில் மிளகாய் வற்றல், மோர்மிளகாய் வறுத்து, கறிவேப்பிலை தாளித்து, கரைத்த புளியை விடவும்.
  5. அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. அதில் வறுத்த ரவையை சேர்த்து நன்கு கெட்டியாக கிளறவும்.
  7. ஒரு தட்டில் கொட்டி சமமாக்கி துண்டுகளாக்கி மோர்க்குழம்புடன் பரிமாறவும்.
  8. காரசார புளிப் பொங்கல் ரெடி!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்