Photo of Dried Turkey berry curry by Asiya Omar at BetterButter
1655
7
0.0(2)
0

Dried Turkey berry curry

Oct-24-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Dried Turkey berry curry செய்முறை பற்றி

இந்தக் குழம்பிற்கு வெறும் சோறும், சுட்ட அப்பளமும் இருந்தாலே போதுமென்பர். அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்கள் பல சேர்ந்து உருவாவது தான் இந்தக் குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்ட வத்தல் - 2 + 2 டீஸ்பூன்
  2. நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
  3. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  4. கறிவேப்பிலை - 2 இணுக்கு.
  5. வறுத்து அரைக்க:-
  6. மல்லி - 2 டீஸ்பூன்
  7. கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் -6
  10. சுண்டை வற்றல் - 2 டீஸ்பூன்
  11. சீரகம் - அரைடீஸ்பூன்
  12. வெந்தயம் - கால் டீஸ்பூன்
  13. மிளகு - கால் டீஸ்பூன்
  14. பூண்டு - 4 பெரிய பற்கள்
  15. தக்காளி -1
  16. வெங்காயம்-1
  17. வெல்லம் சுவைக்கு - சிறிது
  18. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் புளியை ஊற வைக்கவும்.
  2. வாணலியில் மல்லி, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம், சீரகம், கடுகு, மிளகு, சுண்ட வற்றல் இவற்றை சிவக்க வறுத்து எடுக்கவும்.
  3. வறுத்தது ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் பொடிக்கவும், அத்துடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு சுண்ட வத்தலை வறுக்கவும். கறிவேப்பிலை பெருங்காயம் போடவும். அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும் புளிக்கரைசலை விடவும். தேவைக்கு 2 கப் தண்ணீர் சேர்க்கவும். சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
  5. நன்கு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி வர வேண்டும். வெல்லம் சுவைக்கு கால் டீஸ்பூன் சேர்க்கலாம். சிம்மில் வைத்து எண்ணெய் வெளியே வரவேண்டும். அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான வத்தக் குழம்பு தயார். இதனை சூடான சாதம், கூட்டு, பொரியல், அப்பளத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-24-2017
Pushpa Taroor   Oct-24-2017

Good

Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Special Traditional recipe. Nice preparation Fantastic process explanation. Superb taste.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்