வீடு / சமையல் குறிப்பு / காடை பெப்பர் கிரேவி

Photo of Quail pepper gravy by Rabia Hamnah at BetterButter
1124
4
0.0(0)
0

காடை பெப்பர் கிரேவி

Nov-14-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காடை பெப்பர் கிரேவி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிராய்லர் கோழியை தவிர்த்து, நாட்டு கோழி, காடை சேர்த்து கொள்வது நலம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காடை-6
  2. வத்தல் பொடி-2 ஸ்பூன்
  3. இஞ்சிபூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம்-3
  5. தக்காளி-3
  6. மிளகாய்-2
  7. தயிர்-2 டேபிள் ஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்ட
  9. கறிவேப்பிலை- தாளிக்க
  10. மல்லி இலை - அலங்கரிக்க
  11. மிளகு -1/2 டேபிள் ஸ்பூன்
  12. சீரகம் -1/2 டேபிள் ஸ்பூன்
  13. சோம்பு-1/4 டேபிள் ஸ்பூன்
  14. ஏலக்காய் -2
  15. பட்டை-2 இன்ச்
  16. தேங்காய் எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் திரித்து எடுக்கவும். மிகவும் பட்டுபோல் இல்லாமல் இருக்கவும். .
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து தாளிக்கவும். பச்சை வாசனை மங்கியதும் வெங்காயம் , ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வேகவிடவும்.
  3. பின்பு காடை , உப்பு, வத்தல் தூள் சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் சேர்த்து தயிர் சேர்த்து வேகவிடவும். குறைந்த தணலில் வேக விடவும்.
  4. அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை குரைந்த தணலில் வைத்தே வேகவிடவும்
  5. பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி மல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்