வீடு / சமையல் குறிப்பு / தர்ப்பூசணிப் பொங்கல்

Photo of Watermelon Rind Pongal by Priya Satheesh at BetterButter
738
9
0.0(0)
0

தர்ப்பூசணிப் பொங்கல்

Jan-09-2018
Priya Satheesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தர்ப்பூசணிப் பொங்கல் செய்முறை பற்றி

தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதி வைத்து செய்யப்படும் சுவையான பொங்கல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/4 கப்
  2. தர்ப்பூசணியின் வெள்ளைப்பகுதி துருவியது 1/4 கப்
  3. டெமேரேரா சர்க்கரை 1/2 கப்
  4. தர்ப்பூசணிச் சாறு 1 கப்
  5. தண்ணீர் 1 கப்
  6. நெய் 2 - 3 டேபிள்ஸ்பூன்
  7. முந்திரி 5
  8. உலர்ந்த திராட்சை 7
  9. ஏலக்காய் நசுக்கியது 1

வழிமுறைகள்

  1. அரிசியை கழுவி, துருவிய தர்பூசணியின் வெள்ளைப்பகுதி, தண்ணீர் மற்றும் தர்பூசணிச் சாறு சேர்த்து நன்கு வேக விடவும்.
  2. பிறகு, டெமேரேரா சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
  3. சர்க்கரை கரைந்து பொங்கலோடு சேர்ந்து வரும் வரை வேக விடவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொரித்து, பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்