வீடு / சமையல் குறிப்பு / கீரை மிளகூட்டல்

Photo of Keerai milakootal by Sowmya Sundar at BetterButter
564
6
0.0(0)
0

கீரை மிளகூட்டல்

Feb-14-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை மிளகூட்டல் செய்முறை பற்றி

கீரை பருப்புடன் மிளகு சேர்த்து செய்யும் இந்த டிஷ் மிகவும் ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பசலைக்கீரை/முளைக்கீரை/தண்டு கீரை - 2 கப்
  2. பாசிப்பருப்பு -1/4 கப்
  3. மிளகு -2 டீஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் 1/2 டீ ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் -2
  7. உளுத்தம்பருப்பு -2 டீ ஸ்பூன்
  8. தேங்காய் துருவல் 1/4 கப்
  9. உப்பு
  10. கடுகு 1/2 டீஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு 1/2 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரையை நன்கு அலசி நறுக்கி கொள்ளவும்
  2. பாத்திரத்தில் கீரை மற்றும் பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு ,மிளகு, மிளகாய் வற்றல் ,சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. மிக்சியில் தேங்காய் மற்றும் வறுத்ததை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  5. பருப்பு மற்றும் கீரை வெந்ததும் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்