Photo of Cauliflower Masala by Bena Aafra at BetterButter
596
7
0.0(1)
0

Cauliflower Masala

Feb-24-2018
Bena Aafra
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளிஃப்ளவர்
  2. வெங்காயம் -2
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. பட்டை
  5. ஏலக்காய்
  6. தக்காளி -1
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. கொத்தமல்லி இழை
  13. வரமிளகாய்-4
  14. மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
  15. மிளகாய் தூள் -1/4ஸ்பூன்
  16. தேங்காய்ப்பூ
  17. தேவைப்பட்டால் சிக்கன் மசாலா பொடி சேர்க்கவும்.

வழிமுறைகள்

  1. முதலில் காளிஃப்ளவர் -ஐ நறுக்கி சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,பட்டை, ஏலக்காய்,கறிவேப்பிலை ,மிளகாய் ,சேர்த்து தாழிக்க வேண்டும்.
  3. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  6. பின் காளிஃப்ளவர் -ஐ சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
  7. உப்பு சேர்த்து கொள்ளவும்.
  8. பின் காளிஃப்ளவர் நன்றாக வெந்ததும் தண்ணீர் வற்ற நன்றாக கிளறி விடவும்.
  9. கடைசியாக தேங்காய் பூ சேர்த்து கிளறி விட்டு கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கவும்.
  10. சூடான சுவையான காளிஃப்ளவர் மசாலா தயார். .
  11. தேவைப்பட்டால் சிக்கன் மசாலா பொடி சேர்க்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Feb-24-2018
Star Tamil   Feb-24-2018

Nice recipe

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்