வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கார்ன் மேத்தி புலாவ்

Photo of Sweet Corn Methi Pulav by Sowmya Sundar at BetterButter
332
2
0.0(0)
0

ஸ்வீட்கார்ன் மேத்தி புலாவ்

Mar-27-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கார்ன் மேத்தி புலாவ் செய்முறை பற்றி

ஸ்வீட் கார்ன் மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து செய்த சுவையான புலாவ். வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் அதிக மசாலா ,காரம் இல்லாமல் இது போன்று செய்து தரலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன்-1/2 கப்
  2. வெந்தயக்கீரை- 1 கட்டு
  3. பாஸ்மதி அரிசி- 1 கப்
  4. தண்ணீர்- 3/4 கப்
  5. பால் -3/4 கப்
  6. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  7. வெங்காயம்-1
  8. பச்சை மிளகாய்-1
  9. இஞ்சி - 1 துண்டு
  10. பூண்டு -2 பல்
  11. சீரகம்-1 டீஸ்பூன்
  12. பட்டை-1 துண்டு
  13. கிராம்பு-2
  14. ஏலக்காய்-2
  15. பிரிஞ்சி இலை -1
  16. குங்கும பூ- 1/4 டீஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. நெய்-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து விட்டு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். வெந்தயக்கீரையை அலசி வைத்து கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று ஒன்றிரண்டாக தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் நெய் விட்டு சீரகம் ,பட்டை,கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை தாளித்து கொட்டி வெங்காயம் ,இஞ்சி பூண்டு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் அதனுடன் கார்ன் மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். உப்பு , சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  5. இரண்டு நிமிடங்கள் கழித்து அரிசி சேர்த்து வதக்கவும்.பின் அதில் தண்ணீர் மற்றும் பால் விட்டு,குங்கும பூவை சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான மைல்ட்டான புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்